Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » Photoshop பாடம் 05

Photoshop பாடம் 05

Written By Unknown on Monday, 9 March 2015 | 22:36



இன்று Free Transform பற்றி பார்ப்போம். போட்டோஷாப் டூல்களில் முக்கியமான டூல்களில் இதுவும் ஒன்று. இருப்பதை பெரியதாகவும் - பெரியதை சிறியதாகவும் இதன் மூலம் எளிதில் மாற்றலாம். அது போல் ஒரிடத்தில்இருந்து மற்ற இடத்திற்கு எளிதில் மாற்றவும் இந்த டூல் நமக்கு உதவும். முதலில் இதில் உள்ள வசதிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

முதலில் ஒருபடத்தை தேர்வு செய்து அதை நகல் எடுத்து - ஒரிஜினலை வைத்துவிட்டு நகலை ஒப்பன் செய்யவும். பின் அதை மார்க்யூ டூலால் தேர்வு செய்யவும்.

நான் இங்கே SEMINATE COMPUTER CENTERஐ தேர்வு செய்திருக்கின்றேன் அதில் உள்ள SEMINATE  என்பதை மட்டும் மார்க்யூ டூலால் தேர்வு செய்துள்ளேன்.

பின் அதில் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தேன்


உங்களுக்கு இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள Free Transform கிளிக் செய்யுங்கள். இப்போது ஏற்கனவே நீங்கள் தேர்வு செய்தSEMINATE என்கிற பெயர் பலகையை சுற்றி சிறுசிறு கட்டங்களும்-அதன் நான்கு மூலைகளில் சிறிய சதுரமும்- அதிலுள்ள இரண்டு சதுரங்களின் இடையே ஒரு சதுரமும் ஆக மொத்தம் உங்களுக்கு 8 சதுரங்கள் காட்சியளிக்கும். செய்து பாருங்கள். 8 சதுரங்கள் உங்களுக்கு வருகின்றதா? 8 சதுரங்கள் உங்களுக்கு வந்தால் நீங்கள் சரியானபடி பின்தொடர்ந்து வருகிறீர்கள் என கூறலாம். இனி அந்த சதுரங்களில் ஏதாவது ஒன்றை மவுஸால் பிடித்து இழுங்கள். படம் பெரிதாகின்றதா? அதுபோல் அனைத்து சதுரங்களையும் ஒரே மாதிரி இழுங்கள்.

உங்களுக்கு SEMINATE பெயர் எவ்வளவு பெரியதாக மாறிவருகிறது என பாருங்கள். அடுத்து வலப்புறம் கீழ் மூலையில் உள்ள சதுரத்தை அப்படியே இடப்புறம் உள்ள சதுரத்தின் மூலையை தாண்டி எடுத்துச்செல்லுங்கள். படமானது ஏற்கனவே உள்ளதிலிருந்து பிரிந்து இடப்புறம் இடம்மாறி வருவதை அறியலாம்.


இதைப்போலவே படத்தை கீழே இருந்து மேல் நோக்கியும்


மேலிருந்து கீழாகவும் நகர்த்தி வைக்கலாம்


அடுத்து Free Transform டூலில் உள்ள மற்ற உப டூல்களை பார்ப்போம். மார்க்யூ டூலால் படத்தை தேர்வு செய்து பின் கேசரை வைத்து கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 அதில் முதலாக உள்ளது Scale ஆகும். இதை நீங்கள் தேர்வு செய்ததும் உங்களுக்கு File,.Edit, Image போன்ற கட்டளை டூல்கள் உள்ள Menu Bar கீழ் Option Bar பார்த்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தெரிய வரும்.

 alt

இதில் X - AXIS, Y-AXIS, W-WIDTH %, H-HIGHT % ,


இதில் மேலே உள்ள படத்தில் PC Care Centreஐ பாருங்கள். width % மாற்றியபின் கீழே உள்ள படத்தில் PC Care Centreஐ பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள.

அடுத்து கோணம்(Angle). இதில் உள்ள கோணத்தை மாற்றம் செய்வதின் மூலம் படத்தை நமக்கு தேவையான கோணத்தில் மாற்றிக்கொள்ளலாம். கோணங்களிலும் Horizontal Degree, Vertical Degree நமக்கு தேவையானதை அமைத்துக்கொள்ளலாம். சரியான அளவுகளில் படம் அமைக்க இந்த Scale உபயோகிக்கலாம். ஆனால் நமக்கு கண் பார்க்க -மவுஸால் தேர்வு செய்வதுதான் சுலபமாக இருக்கும். அதில் நாம் நிபுணராக மாற்றியபின் Scale அளவுபடி படத்தை அமைக்கலாம். Scale மூலம் படத்தை மாற்றாமல் மவுஸாலேயே படத்தை மாற்றுவது என அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

போட்டோ ஷாப்

Free Transform Tool Select செய்ய Ctrl+T அழுத்தினால் போதுமானது. உங்களுக்கு Transform Tool Open ஆகும். அதுபோல் போட்டோஷாப் திறந்தபின் வெற்றிடத்தில் மவுஸால் டபுள் கிளிக் செய்ய நீங்கள் கடைசியாக திறந்த படத்தின் போல்டர் ஓப்பன் ஆகும்.

- யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் -
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template