கண்ணீரில் கரைகின்ற இரவுகள்........
.jpg)
நிலவு தொடும் தூரத்தில் - என்
நினைவுகள் தொலைந்து நின்றாலும்
கண்ணீரின் விளிம்புகளில் கரைகின்ற
நிசப்தமான இரவுகளின் ஓரத்தில் - இவனது
கனவுகள் கதறியழுகிறதே......
வார்த்தைகள் மௌனித்துப் போக
இதயம் மட்டும் புலம்புகறிது.....
விழிகளுக்குள் கருவாகி
உள்ளத்தில் பிரசவித்து
நெஞ்சறைக்கோளத்தினுள்
செதுக்கப்பட்ட அவளின் நினைவுச்
சிற்பங்களால் என்
உணர்வுகளும் சிலுவையில் அறையப்பட்ட
இயேசுவாய் உன் நினைவுகளைச் சுமந்து கொண்டே
தவிக்கிறது.....
காதலால் சிந்திய - என்
அமிலக்கண்ணீரில் சிதைந்து போன
எலும்பு மச்சைகளில் இன்னும்
இரக்கமற்றவளின் காதல் சுவடுகள்
கைகோர்த்து செல்கிறபோதும்
குதியின் அபிசேகம் குறையவில்லையே.....
காற்றோடு கலந்து
மூச்சுக்காற்றில் சங்கமித்த அவளின்
முனங்கள் ஓசை இன்னும் - இவனது
செவிகளுக்குள் ரீங்காரமிடுகின்றது.....
சந்தோசக் காற்றில்
சிற்றுக் குருவியாய்
சிறகடித்துத் திரிந்த - இவனது
இளமைக்காலம் உன்னால்
சிறகிழந்து திசையற்ற கூண்டுப்பறவையாய்
முடங்கித் தவிக்கிறது.....
பெண்ணே....
உனை சிந்திக்க தெரிந்த என்
இருதயத்திற்கு
எனை சிந்திக்க மறந்து விட்டதடி.....
உன்னால்
என்
வார்த்தைகள் ஊனமானது போதுமடி
காதலாவது சிற்பமாகட்டும்........
0 comments:
Post a Comment