.jpg)
சிந்திய கண்ணீரும்
வறண்ட வயிறும்
வற்றிய நாவும் கொண்டு
உதிரமற்ற நரம்புகளில் பாலை சேமித்து
எனக்களித்தவள்
மண்தரையில் சிதைந்த பாயில்
நுளம்புகளின் மத்தி்யில்
சிதைந்த பாயில்
தூக்கமின்றி துயரப்பட
எனக்கு மட்டும் எதற்கடி இந்த பஞ்சு மெத்தை.....
எந்தையின் உதிரத்தில் உருவான உறவுகள் அங்கே
வறுமையின் சீற்றத்தால் உருக்குழைந்து
கண்ணீரில் கரைந்து பசியோடு தவித்து நிற்க
எனக்கு மட்டும் எதற்கடி இந்த அறுசுவை ஆகாரம்.....
பசி-பட்டினி
இரண்டுமே எம்மோடு ஒட்டிப் பிறந்தவை....
அழுகை ஒன்றே ஆறுதல்.....
பெருமூச்சொன்றே நிம்மதி......
தாய் இருப்பதே சந்தோசம்
மழை மேகத்தைக் கண்டால்
அன்னையின் விழிகளில் அருவி...
காரணம்.....
எம் குடிசையின் கூரையில் ஈர்க்குகள் மட்டுமே....
வெயிலும் மழையும் விழுந்தால்
எம் மனையின் உள்ளிருக்கும் புழுதியில் படாமல்
செல்வதில்லையே......
கோழியின் இறக்கைகளுள் ஒழிந்து கொள்ளும் குஞ்சுகளாக
என் தாயின் முந்தானைக்குள் மறைந்து தூங்கும்
என் உறவுகளுக்கு
தாய் மட்டுமே குடை-விளக்கு-தாலாட்டு.....
இதுதான் என் உதிர உறவுகளின்
உண்மை நிலை......
இத்தனையாலும் - என்
உதிர உறவுகளின் உணர்வுகள் அங்கே
ஊனமுற்று நிற்க.....
என் உணர்வுகள் மட்டும் எவ்வாறடி மரத்துப்போகும்......
சுமைதாங்கியவள்....
சுதந்திரமற்ற பறவையவள்.....
சந்தோசமறியாதவள்....
ஜனனித்தது முதல் மரணித்துக் கொண்டிருப்பவள்....
பிள்ளைகளுக்காய் பிரார்த்திப்பவள்.....
இத்தனைக்கும் மத்தியில் -எம்
நல் வாழ்வுக்காய் கனா காண்பவள்......
இத்தனையும் குடிகொண்ட என் கோயிலை
நான் எவ்வாறாடி மறந்து வாழ்வேன்.......
0 comments:
Post a Comment