Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....
Written By Unknown on Thursday, 20 March 2014 | 07:31
நிசப்தமான இரவு....... நிலா கூட உறங்குகிறது.... காற்றும் கனப்பொழுது கண் அயர்ந்து கொள்கிறது... இருள் ராத்திரியை அர்ச்சனையால் அபிஷேசகம் செய்கிறது.... ஆனாலும்...... இனந்தெரியா நடுநிசியில் எங்கோ ஓர் உளரல் சத்தம்.... திடுக்கிட்டுக் கொள்கிறது - என் கனவுகளுடன் இணைந்த உணர்வுகள்... வாயடைத்துக்கொள்கிறது உள்ளிருக்கும் உள்ளம்.... நாளங்களுடன் சண்டை பிடித்துக் கொள்கின்ற இவனது குருதியும் ஒரு முறை திடுக்கிட்டுக் கொள்கிறது.... ஆம்.... காதலால் கட்டுண்டு நினைவுகளால் சிதைக்கப்டுகின்ற - இவனது இதயம் தூரத்தில் ஓர் மூலையில் முடங்கிக் கிடக்கிறது..... அமிலத்தில் தோய்ந்த கண்ணீரால் அவளின் நினைவுகளுக்கு திருநீர் பாய்ச்சுகிறது.... இதயத்து செந்நீரும் வெந்நீராய் சுடுகிறது... அவளின் கனவுகளுடன் இணைந்த கற்பனைகள் என்னை அமிலமாய் சுடுகிறது...... விடியல் தொடாத இரவுகளின் மத்தியில் உறங்காமல் துடித்துக்கொள்ளும் உன் ஞாபகங்களின் வலியில் இது விசித்திரமானதுதான்............
0 comments:
Post a Comment