Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » Photoshop பாடம் - 09

Photoshop பாடம் - 09

Written By Unknown on Sunday, 15 March 2015 | 08:34

போட்டோஷாப்பில் இன்று Duplicate,Image Size,Canvas Size,File info மற்றும் Page Setup பற்றி பார்க்கலாம். அதில் நாம் மெனுபார் சென்று அங்கு Image -ல் Duplicate,Image Size,Canvas Size உபயோகிப்பதை பற்றி பார்த்தோம். ஆனால் அங்கு செல்லாமலே நாம் சுலபமாக மற்றுமோர் வழியில் மேற்கண்ட கட்டளைகளை செய்வதை இங்கு பார்க்கலாம்.

முதலில் ஒரு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.நான் எனது மருமகன் அஸ்கி அஹமட்டின் படத்தை எடுத்துள்ளேன். அதில் படத்தின் மேல்புறம் உள்ள புளு பட்டையின் மேல் கேசரை வைத்து கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் உள்ள Duplicateஐக் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 ஓகே கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோக்கள் இரண்டு தோன்றுவதை பாருங்கள்.



அடுத்துள்ளது Image Size தேர்வு செய்யுங்கள்.


உங்களுக்கு தேவையான அளவினை இங்கு தேர்ந்தேடுத்துக் கொள்ளுங்கள். ஓகே கொடுத்தால் நீங்கள் விரும்பிய அளவினை பெறலாம்.

alt
அடுத்துள்ளது Canvas Size. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


இதனை தேர்வு செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.alt
உங்கள் படத்தின் அளவினை Current Size-ல் பார்க்கலாம். New Size-ல்நமக்கு வேண்டிய அளவினை கொடுத்துப் பெறலாம்.இதில் Anchorபார்த்தால் அதில் ஓன்பது கட்டங்கள் இருக்கும்.சுற்றிலும் அம்புக்குறியும்நடுவில் வெண்மை நிறமும் இருக்கும்.உங்கள் கேசரை எந்த அம்புக்குறியில் நீ்ங்கள் கிளிக் செய்கின்றீர்களோ அந்த இடம்வெள்ளை நிறத்தையும் அநத இடத்தை சுற்றி அம்புக்குறிஅமைவதையும்காணலாம்.


இப்போது உங்களுக்கு தேவையான அளவினை நீயு
சைஸ்ஸில்நீள -அகலத்துடன் குறிப்பிடுங்கள்.
(உங்கள் படத்தினை ஓன்பது பாகங்களாக
பிரித்து அதில் எந்த இடம் உங்களுக்கு வேண்டுமோ
அந்த இடத்தைநீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்)
கீழே படத்தை நன்கு அவதானித்து செயற்படுங்கள்.
அகலம் 2.5 அங்குலம் உயரம் 1.5 அங்குலமும் வைத்துள்ளேன்.
கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.


ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ தோன்றும்



இதைப்போல் உங்களுக்கு தேவையான இடத்தை தேர்வு செய்யுங்கள்.இந்த கட்டளையை நாம் Crop Tool மூலமும் செய்யலாம்.அதைபின் வரும் பாடங்களில் பார்க்கலாம். கடைசியாக உள்ளது Page Setup. அதை தேர்வு செய்யுங்கள்


உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள்
பேப்பரின் அளவினையும் போட்டோவானது நீளவாக்கிலா அல்லது
அகலவாக்கினில் தேவையா என்பதையும் தேர்வு செய்யுங்கள்.

alt

இதில் உள்ள பிரிண்டரை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

alt
உங்கள் பிரிண்டர் பெயரையும் அளவினை செட் செய்து ஓகே கொடுங்கள்.பிரிண்டர் இணைப்பு கொடுத்திருந்தால் உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்தபடம் ஆனது பிரிண்ட் ஆகும். இதே கட்டளையை நாம் மெனுபாரில் உள்ளபைல் மூலமும் நிறைவேற்றலாம். அதனையும் நாம் பின் வரும் பாடங்களில்பார்க்கலாம்.

மீண்டும் Photoshop பாடம் 10ல் சந்திப்போம் 
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template