Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » உங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

Written By Unknown on Sunday, 15 March 2015 | 10:19




மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. உடலில் வயிற்றின் பின்புறம் அமைந்துள்ள இவை 4.5 அங்குல நீளமுடையவை. சிறுநீரகத்தின் மிக முக்கிய பணி ரத்தத்தை வடிகட்டுவதுதான். உடலின் ரத்தம் ஒரு நாளில் பலமுறை சிறுநீரகத்தினுள் சென்று வெளி வருகின்றது.

அப்போது உடலின் கழிவுப் பொருள்களை நீக்கி உடலின் திரவத் தன்மையை சமப்படுத்தி, தாது உப்புகளை ஒழுங்கு படுத்துகின்றது. ரத்தத்தை வடிகட்டி சுத்தம் செய்யும் பொழுது சிறுநீர் உற்பத்தி ஆகி சிறுநீராக பையில் சேர்கிறது. பின்னர் சிறுநீர் குழாய்களின் மூலம் வெளியேற்றப்படுகின்றது. ஒவ்வொரு சிறுநீரகமும் மில்லியன் கணக்கான நெப்ரான்களை தன்னிடம் கொண்டுள்ளது.

ஒவ்வொன்றும் மிக நுண்ணிய வடிகட்டிகளாக செயல்பட்டு ரத்தத்தை சுத்தம் செய்கின்றன. 90 சதவீத சிறுநீரகம் பாதிப்படையும் வரை கூட அறிகுறிகளும், பிரச்சினைகளும் இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. பீன்ஸ் கொட்டை வடிவம் கொண்ட சிறுநீரகம் மனிதனின் ரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கு மிகவும் முக்கியமானது.

உடலில் உப்பு அளவும், நீரின் அளவும் சீர் செய்யப்படுவதால் ரத்த அழுத்தம் சீராகின்றது. சிறுநீரகம் நாள் ஒன்றுக்கு 180 லிட்டர் திரவத்தை வடிகட்டுகின்றது. சுமார் 2 லிட்டர் திரவம் சிறுநீராக வெளியாகின்றது. சில பொருட்கள் ரத்தத்திலிருந்து சிறுநீரில் வெளியேற்றப்படுகின்றன. ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அதிக உப்பு இரண்டுமே சிறுநீரில் வெளியாகும்.

மனித உடலில் நீர் சத்து குறையும் பொழுது, உடற்பயிற்சியின் பொழுது அதிக வியர்வை வெளியேறுவதால் நீர் சத்து குறையும் போதோ அல்லது உடல் நலம் இன்றி இருக்கும் பொழுதோ சிறுநீரகம் உடலுக்கு தேவையான நீரை நிறுத்தும். இது சிறு நீரகத்தில் சுரக்கும் ஹார்மோனால் சீர் செய்யப்படுகின்றது. மற்றொரு ஹார்மோன் எலும்பின் மஜ்ஜையில் இருந்து சிவப்பணுக்களின் உற்பத்தியினைத் தூண்டும்.

எப்பொழுது சிறுநீரகம் வேலையில் தடை ஏற்படுகின்றது?

திடீரென ஏற்படும் சிறுநீரக காயங்கள் அல்லது நீண்ட நாள் நோய்களினால் ஏற்படும் பாதிப்பினால் சிறுநீரக செயல்பாட்டில் தடை ஏற்படுகின்றது. முழு தடை என்பது இரு சிறு நீரகங்களும் முழுமையாய் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுதே ஏற்படுகின்றது. ஒருசிறுநீரகம் பாதித்து ஒரு சிறுநீரகம் நன்கு செயல்பட்டால் அதுவே போதுமானதாகின்றது.

இரு சிறுநீரகங்களும் முழுமையாய் பாதிக்கப்படும் பொழுது மாற்று சிறு நீரகம் ஒன்றே முழு தீர்வு ஆகும். * அதிக ரத்தப் போக்கினால் சிறு நீரகத்திற்கு வரும் ரத்த அளவு குறையும் பொழுது;

* வாந்தி, வயிற்றுப் போக்கு, அதிக வியர்வை, ஜுரம் இவற்றினால் உடலின் நீர் தன்மை வற்றும் பொழுது;

* குறைவான நீர் எடுத்துக் கொள்ளும் பொழுது;

* சில மாத்திரைகளின் காரணமாக உடல் நீரினை இழக்கும் பொழுது;

* முறையற்ற ரத்தப்போக்கு சிறுநீரகத்திற்கு ஏற்படும் பொழுது சிறுநீரக செயல் தடைபாடு ஏற்படும்.

அதிக கிருமி தாக்குதலால் நோய் எதிர்ப்பு சக்தி இன்றி உடல் பாதிப்பிற்குள்ளாகும் பொழுது, சிறுநீரக வீக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தினை செயலிழக்க செய்யும். சில மருந்துகள் சிறு நீரகத்திற்கு பாதிப்பாக இருக்கும். அவைகளாலும் சிறுநீரக செயல் இன்மை ஏற்படும். மேலும் சில உடல் பாதிப்புகள் வயிற்றில் கட்டி போன்றவையும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.

* முறையாக கட்டுப் படுத்தப்படாத நீரிழிவு நோய்,

* முறையாக கட்டுப்படுத்தப் படாத உயர் ரத்த அழுத்தம்,

* சிறுநீரக வீக்கம்

* சில நேரங்களில் சிறுநீரக கற்கள் இவைகளாலும் பாதிப்பு ஏற்படும்.

சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்:

ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் தெரியாது.

* சோர்வு
* அசதி
* மூச்சு வாங்குதல்
* உடல் வீங்கியது போல் இருத்தல்
* ரத்த சோகை
* பசியின்மை
* இருதய பாதிப்பு
* உயர் ரத்த அழுத்தம்
* உடலில் உப்பு அதிகரிப்பு ஆகியவை பாதிப்பின் அறிகுறி ஆகும்.

ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை மேலும் சில குறிப்பிட்ட பரிசோதனைகளால் சிறுநீரக பாதிப்பு கண்டறியப்படுகின்றன. சிறுநீரக பாதிப்பு வருமுன் காப்பதே சிறந்த முறையாகும். சிறுநீரக பாதிப்பு உள்ள நிலையில் அதிக நீர், உப்பு, பொட்டாசியம் போன்றவைகளை அதனால் வெளியேற்ற முடியாது.

* வாழைப்பழம்
* பால்
* கீரை
* சர்க்கரை வள்ளி போன்ற உணவுகள் அதிக பொட்டாசியம் சத்து கொண்டவை.

எனவே சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் இவைகளை மிக அதிகமாக சாப்பிடக் கூடாது.

இதுபோல் அதிக பாஸ்பரஸ் சத்து உடைய

* பால்
* பாலாடை
* கொட்டை வகைகள்
* கோலா வகைகள்
* டின்னில் அடைத்த டீ
* தயிர்
* பீன்ஸ் கொட்டை
* முழு தானியம் போன்றவையும் சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் தவிர்த்து விட வேண்டும்.

பொதுவில் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் பொழுது ...

* பாஸ்பரஸ் குறைப்பதற்கான மருந்துகள்
* சிவப்பு ரத்த அணு கூடுவதற்கான மருந்துகள்
* இரும்பு சத்து மருந்துகள்
* ரத்தக் கொதிப்பினை சீர் செய்யும் மருந்துகள்
* வைட்டமின் மாத்திரைகள் என கொடுக்கப்படுகின்றன.

டயாலிஸஸ் என்பது பொது மக்கள் எளிதாய் கூறும் மருத்துவ வார்த்தை ஆகி விட்டது. டயாலிஸஸ் என்பது உடலின் கழிவுப் பொருட்களை வடிகட்டி வெளி அனுப்பும் சிறு நீரகத்தின் வேலையை மிஷின் கொண்டு செய்வது. இது சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு உயிர் காக்கும் முறை ஆகும்.

மாற்று சிறுநீரகம் பொருத்தும் முறை இன்று மருத்துவ உலகில் வெற்றிகரமான முன்னேற்றத்தை பெற்றுள்ளது.


-நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்-
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template