Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?

ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?

Written By Unknown on Monday, 24 March 2014 | 22:10


ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?
நோய்க்கான காரணத்தைப் பொருத்து ஆஸ்துமாவை இரண்டாகப் பிக்கிறார்கள்.
Allergic Asthma எனும் முதல் வகையினருக்குக் காரணம் ஒவ்வாமை. பாரம்பயமாக நோய் வருதல், மூக்கடைப்பு, தோல் அலர்ஜி நோய்கள் போன்ற குறிகுணங்களை இப் பிவினர் பெற்றிருப்பர். ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட அணுக்களுக்கு Ig என்று பெயர். நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொடுக்க டி, ஏ, எம், ஜி, ஈ என ஐந்து வகையான வெள்ளை அணுக்கள் உள்ளன. இவற்றில் சுவாச மண்டல நோய்களை எதிர்க்கவும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருள்களை எதிர்க்கவும் IgE என்ற வகை வெள்ளை அணுக்கள் உள்ளன. ஒவ்வாமைத் தன்மையைக் கொண்ட முதல் வகை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ரத்தப் பசோதனை செய்யும் நிலையில் IgE வகை ரத்த வெள்ளை அணுக்கள் அதிகமாக இருக்கும்.
இந்த காரணங்கள் எதுவுமே இல்லாமல் IgE -ம் அளவுடன் இருந்து மேல்சுவாச மண்டல அழற்சியைத் தொடர்ந்து இரைப்பு வருவது Idiosyncratic asthma எனும் இரண்டாவது வகை.
முதல் வகை ஆஸ்துமா பெரும்பாலும் இள வயதிலேயே வந்துவிடும். இரண்டாம் வகை ஆஸ்துமா வாலிப வயதையொட்டி துவங்குகிறது.

ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறி என்ன?
மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றுடன் இருமல் ஆரம்பிக்கும். இருமல் தொடங்கியவுடன் நெஞ்சில் உள்ள சளியைத் துப்புவதற்காக நோயாளி எழுந்திருப்பார். ஆனால் சளி எளிதில் வராது. கொஞ்சம் கஷ்டப்பட்டு சளியைத் துப்பும்போது சளியின் தன்மை ஜவ்வசி கஞ்சி போன்று இருக்கும்; ஒரு சிலருக்கு சேமியா போன்று சிறிதளவு சளி வெளியேறும். கொஞ்சம் தூரம் நடந்தால்கூட இரைப்பு ஏற்படும். இளங்காலைப் பொழுது, இரவில் அதிகம் இரைப்பு இருக்கும். இவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள்.

ஆஸ்துமாவா, சைனுசைட்டீஸô–அறிகுறிகளைக் கொண்டு வித்தியாசப்படுத்தித் தெந்துகொள்வது எப்படி?
கண் எச்சல், தலைவலி, மூக்கடைப்பு, தும்மல் ஆகியவை சைனுசைட்டிஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். சைனுசைட்டிஸ் நோய் இருந்தால் இரைப்பு இருக்காது. தலைவலி, தலையில் நீர் கோர்த்து கனமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை சைனுசைட்டீஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். மேலும் மூக்கு, தொண்டை ஆகியவற்றை உள்ளடக்கிய மேல் சுவாசப் பாதை நோய் (Upper Respiratory Tract Disease)  என சைனுசைட்டீஸ் அழைக்கப்படுகிறது.
ஆஸ்துமாவின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
பொதுவாக எந்த அன்னியப் பொருளையும் உள்ளே அனுமதிக்காமல் வெளியே தள்ளிவிடும் தன்மை நுரையீரலுக்கு உண்டு. இதனால்தான் தும்மல் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயின் ஆரம்ப அறிகுறியாக தொடக்கத்தில் நுரையீரல் பாதை லேசாகச் சுருக்கமடைந்து, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். அதிகாலை, இரவில் மூக்கடைப்பு, தும்மல் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு, தும்மலுடன் நெஞ்சை இறுக்கிப் பிடித்ததுபோன்ற உணர்வு இருக்கும். ஆரம்பத்தில் ஒரு வாரத்துக்கு இவ்வாறு பிரச்சினை இருக்கும்.
நோய் தீவிரமடையும் நிலையில் இரைப்பு (Wheezing) ஏற்படத் தொடங்கும். நோயாளி தன் காதுகளை இரண்டு கைகளால் மூடிக்கொண்டால் இரைப்பின் ஒலியைக் கேட்க முடியும். அது யாழ் ஒலிபோல இருக்கும்.
ஆஸ்துமாவா, சைனுசைட்டீஸô–அறிகுறிகளைக் கொண்டு வித்தியாசப்படுத்தித் தெந்துகொள்வது எப்படி?
கண் எச்சல், தலைவலி, மூக்கடைப்பு, தும்மல் ஆகியவை சைனுசைட்டிஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். சைனுசைட்டிஸ் நோய் இருந்தால் இரைப்பு இருக்காது. தலைவலி, தலையில் நீர் கோர்த்து கனமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை சைனுசைட்டீஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். மேலும் மூக்கு, தொண்டை ஆகியவற்றை உள்ளடக்கிய மேல் சுவாசப் பாதை நோய் (Upper Respiratory Tract Disease) என சைனுசைட்டீஸ் அழைக்கப்படுகிறது.
ஆஸ்துமாவில் தலைவலி, கண் எச்சல், கண்ணீல் நீர் வடிதல் ஆகியவற்றுக்கு இடமில்லை. எனவே ஆஸ்துமாவையும் சைனுசைட்டீஸ் நோய்களுக்கான அறிகுறிகளையும் வேறுபடுத்திப் பார்ப்பது எளிது.
ஆஸ்துமாவுக்கு மன அழுத்தத்துக்கும் (Stress) தொடர்பு உண்டா?
தொடர்பு உண்டு. இதை பதினெண் சித்தர்களில் ஒருவரான யூகி சித்தரே குறிப்பிட்டுள்ளார். அதாவது “மா துக்கம்’ (பெரிய துக்கம்) இரைப்பை நோய்க்கு வழி வகுக்கும் என அக் காலத்திலேயே அவர் கூறியுள்ளார். மன அழுத்தம் காரணமாக ஆஸ்துமா அதிகமாகக்கூடும் என்பதை அலோபதி மருத்துவர்களும் ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் ஆஸ்துமா நோய்க்கான சித்த மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக நோயாளியின் மன நிலைக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு ஆலோசனை அளிக்கப்படுகிறது.
ஆஸ்துமா காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுமா?
உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. தீவிர ஆஸ்துமா நோய் காரணமாக நுரையீரலுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும். நோயாளியின் உதடு, நாக்கு, நகங்கள் நீல நிறமாக மாறும். மூளை பாதிப்படையக்கூடும். இத்தகைய நிலைக்கு ‘Status Asthmaticus’ என்று பெயர். சில நேரங்களில் மூச்சு அடைப்புடன், வியர்வை, படபடப்பு ஆகியவையும் சேர்ந்து இருந்தால் அது ஆஸ்துமாவாக இல்லாமல் மாரடைப்பாகக்கூட இருக்கலாம். இந் நிலையில் நோயாளியை உடனடியாக அலோபதி மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிவில் சேர்ப்பது அவசியம்.
“ஆஸ்துமா அட்டாக்’ நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு செய்ய வேண்டிய முதலுதவி என்ன?
நோயாளியை நல்ல காற்றோட்டத்தில் தலையை சற்று தூக்கினாற்போல் படுக்க வைக்க வேண்டும். சுய நினைவுடன் நோயாளி இருந்தால் சிறிதளவு வெந்நீரை குடிக்கச் செய்யலாம்; இது மூச்சுக் குழலை விவடையச் செய்யும். பின்னர் காலதாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆஸ்துமா நோயாளிகள் எந்த வகையான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவையே ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டும். அதாவது இட்லி, இடியாப்பம், புட்டு, ஆப்பம் போன்ற ஆவியில் வெந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. பரோட்டா, சப்பாத்தி, பியாணி போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடுடன் மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) உதவுமா?
நிச்சயம் உதவும். பெங்களூல் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதற்கென பிரத்தியேக நாற்காலி சுவாசப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நாற்காலி சுவாசப் பயிற்சி ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவது நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து சித்த மருத்துவத்தில் நாற்காலி பிராணாயமப் பயிற்சி பந்துரைக்கப்படுகிறது.
ஆஸ்துமா நோயாளிகள் மோர் சாப்பிடக்கூடாதா?
நமது நாடு வெப்பம் மிகுந்த நாடு என்பதால் மோரை அறவை தவிர்ப்பது மற்ற உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கலாம். எனவே ஆஸ்துமா நோயாளிகள் பகல் நேரத்தில் மட்டும் மோர் சாதம் சாப்பிடலாம். மோல் கொஞ்சம் மிளகைக் கலந்து சாப்பிட வேண்டும்; வயிற்றுப் புண் பிரச்சினை உள்ள நோயாளிகள் மிளகுக்குப் பதிலாக மஞ்சள்தூள் கலந்த மோரை ஊற்றி பகலில் சாதம் சாப்பிடலாம்.
மூச்சுக் குழலை நேரடியாக விவடையச் செய்யவும் (Broncho-dilation) சளியை இளக்கி எளிதாக வெளியேற்றவும் (Mucolytic) மிளகு அல்லது மஞ்சள் உதவும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
ஆஸ்துமா இருந்தால் ஐஸ்கிரீம் உள்பட குளிர்ச்சியான பொருள்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா?
ஆம். ஏனெனில் குளிர்ச்சியான பொருள்கள் காரணமாக நுரையீரலின் சுவாசப் பாதை சுருங்கி மூக்கடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஐஸ்கிரீம் உள்பட நீர்ச்சத்து மிகுந்த வெள்ளக்காய், பூசணி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
இதேபோன்று எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருள்களையும் தவிர்க்க வேண்டும். பால், வெண்ணெய், நெய் உள்பட கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது அவசியம்.
ஆஸ்துமாவை “சித்தம்’விரட்டும்!
மனித உடலில் உள்ள பெய உறுப்புகளில் நுரையீரலும் ஒன்று. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பித்தெடுத்து அதை ரத்தத்தோடு கலந்து சுத்தமாக இதயத்துக்கு அனுப்பும் பணியை செவ்வனே செய்துவருவது நுரையீரல்தான்.
மேலும் ஆக்சிஜன் என்ற பிராண வாயுவுடன் தொடர்புள்ளதால் மனிதனின் உயிர் இயக்கத்துக்கும் நுரையீரலுக்கும் உள்ள தொடர்பைச் சொல்லத் தேவையில்லை. மூளை, இதயம், கல்லீரல் போன்ற மற்ற உறுப்புகளுக்கும் வெளி உலகுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால் காற்றுடன் நேரடித் தொடர்பு நுரையீரலுக்கு உள்ளதை மறந்துவிடக்கூடாது. எனவே நுரையீரலை நோய் தாக்காமல் பார்த்துக்கொள்வதில் கவனம் அவசியம். குறிப்பாக புகை பிடித்தல் பழக்கம் நுரையீரலுக்கு நல்லது அல்ல.
நுரையீரல் தொடர்பான நோய்களில் ஆஸ்துமா குறிப்பிடத்தக்கது. மூக்கடைப்பு, தும்மலில் தொடங்கி மார்புச் சளியை வெளியேற்ற முடியாமலும் இரைப்புடனும் ஆஸ்துமா நோயின் தாக்கம் தொடரும். உணவுக் கட்டுப்பாடு உள்பட தொடர் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் ஆஸ்துமா நோயைக் குணப்படுத்த முடியும்.
சித்த மருத்துவத்தில் ஆஸ்துமா நோய்க்குப் பெயர் என்ன? இந் நோய் எந்த வயதினரை அதிகம் தாக்குகிறது?
ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவத்தில் “இரைப்பு நோய்’ என்று பெயர். இந் நோய்க்கு “மந்தார காசம்’ என சித்தர்கள் பெயட்டனர். உலகம் முழுவதும் 5 சதவீதம் பேர் ஆஸ்துமா நோயால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50 சதவீதம் பேர் குழந்தைகள் (2:1 ஆண், பெண் விகிதம்.). நகரங்களின் வளர்ச்சி, தொழில் பெருக்கம் காரணமாக கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது; இதனால் சுற்றுச்சூழல் மாசடைவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
ஆஸ்துமா நோயினால் பெரும்பாலும் 3 முதல் 7 வயது வரை உள்ள நகர்ப்புறக் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் மண் தூசு அதிகம் உள்ள இடங்களில் விளையாடுதல், பள்ளிக்கூடங்களின் புதிய சூழல் ஆகியவை காரணமாக குழந்தைகள் ஆஸ்துமா பிரச்சினைக்கு உள்ளாகின்றனர்.
ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை என்ன?
ஆஸ்துமா நோய் இருப்பது தெயவந்தவுடன் மேற்சொன்ன உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம். நோயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து முழுமையாகச் சிகிச்சை அளிக்க சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.
1. முசுமுசுக்கை, கசலாங்கண்ணி இலைகளை (இவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.) நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆஸ்துமாவுக்கான மூலிகை டீ தயார். இதை தினமும் காலையிலும் இரவிலும் சாப்பிடுவது சிகிச்சையின் ஒரு பகுதி. மூச்சுக் குழலை விவடையச் செய்து மூக்கடைப்பைத் தவிர்க்கவும் சளியை எளிதாக வெளியேற்றவும் இந்த மூலிகை டீ உதவும்.
2. மிளகு கல்பம் (தூள்). இது மிளகுடன் கசலாங்கண்ணிச் சாறு, தூதுவளைச் சாறு, ஆடாதொடைச் சாறு ஆகியவற்றைக் கொண்டு தயாக்கப்படுகிறது. காலை, இரவு ஆகிய இரு வேளையும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு இந்த மிளகு கல்பத்தை தேனுடன் கலந்து அரை டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.
3. பூரண சந்திரோதயச் செந்தூரம் (தூள்), வாசாதி லேகியம்: இவற்றை காலை, இரவு இரு வேளையும் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டும். பூரண சந்திரோதயச் செந்தூரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். வாசாதி லேகியத்தை நெல்லிக்காய் அளவு எடுத்துச் சாப்பிட வேண்டும்.
எவ்வளவு நாள் சித்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும்?
ஆஸ்துமா நோய்க்குத் தொடர்ந்து 48 நாள் (ஒரு மண்டலம்) மேற்சொன்ன சித்த மருந்துகளைச் சாப்பிட்டு வந்தாலே நல்ல நிவாரணம் கிடைக்கும். எனினும் நோய் தீவிரமாக உள்ள நிலையில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்த (Immuno Modulation)  சித்த மருந்துகளைத் தொடர்ச்சியாக ஓர் ஆண்டுக்குச் சாப்பிட வேண்டும்.
நுரையீரலின் முக்கியப் பணி என்ன?
ஆக்சிஜன், கார்பன்-டை ஆக்ûஸடு, நைட்ரஜன் உள்பட பல்வேறு வாயுக்கள் அடங்கிய வெளிக் காற்று சுவாசக் குழாய் வழியே நுரையீரலுக்குள் நுழைகிறது. இவ்வாறு வெளிக் காற்று வந்தவுடன் அதில் பெரும்பகுதியாக உள்ள ஆக்சிஜனை மட்டும் பித்தெடுத்து ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றி இதயத்துக்கு அனுப்பும் முக்கியப் பணியை நுரையீரல் செய்கிறது. இதயத்திலிருந்து தொடங்கி உடல் முழுவதுக்கும் பயணம் செய்துவிட்டு வரும் கெட்ட ரத்தத்தை மீண்டும் சுத்திகத்து ஆக்ஸிஜன் கலந்து நல்ல ரத்தமாக மாற்றி அனுப்புவதையும் நுரையீரல் செய்கிறது.
உடலில் நுரையீரலின் (Lung) அமைப்பு என்ன?
உடலில் வலதுபுறம், இடதுபுறம் என இரண்டு பக்கமும் நுரையீரல் பரவி உள்ளது. வலதுபுறம் மூன்று பகுதிகளாகவும் (Lobes) இடதுபுறம் இரண்டு பகுதிகளாகவும் (Lobes)  நுரையீரல் அமைந்துள்ளது. மூன்று பகுதிகள் உள்ளதால் வலதுபுறம் நுரையீரலின் அளவு சற்று பெதாகக் காணப்படும். நுரையீரலின் மொத்தம் உள்ள 5 பகுதிகளில் 4 பாதிக்கப்பட்டு, ஒன்று நல்ல நிலையில் இருந்தால்கூட ஒருவரை வாழ வைக்க முடியும்.
புகை பிடிப்பதால் ஆஸ்துமா அதிகக்குமா?
அதிகக்கும். புகை பிடிப்பதால் மூச்சுக் குழல், நுரையீரலில் நிரந்தர அழற்சி (Inflammation) ஏற்படுகிறது. இது ஆஸ்துமாவை அதிகக்கச் செய்யும். எந்த மருந்துகள் சாப்பிட்டாலும் புகை பிடிப்பதை நிறுத்தாவிடில் ஆஸ்துமா பிரச்சினை நீடிக்கும். புகை பிடிப்பவர் அருகிலிருந்து புகையை சுவாசிப்பதாலும் Passive smoking ஆஸ்துமா அதிகக்கும்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வழி என்ன?
பீன்ஸ் உள்பட நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் காலையில் எழுந்தவுடனும் தண்ணீர் குடிப்பது அவசியம்.
இதேபோன்று வாயுக் கோளாறைத் தவிர்க்க உருளைக் கிழங்கு உள்பட கிழங்கு வகைகளை உணவில் தவிர்ப்பது அவசியம்.
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் -
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template