Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » புதன் கிரகம் முந்தைய அளவைவிட சுருங்கி வருகிறது: மெசஞ்சர் விண்கலம்

புதன் கிரகம் முந்தைய அளவைவிட சுருங்கி வருகிறது: மெசஞ்சர் விண்கலம்

Written By Unknown on Monday, 24 March 2014 | 21:09


சூரியனுக்கு மிக அண்மையில் இருக்கும் புதன் கிரகம் தற்போது அதன் முந்தைய அளயைவிட சுருங்கி கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய மதிப்பீடு அளவைவிட புதன்- கிரகம் கடந்த நான்கு பில்லியன் ஆண்டுகளில் அதன் சுற்றளவு 8.6 மைல் அளவு சுருங்கி உள்ளதாக நாசாவின் மெசஞ்சர் விண்கலம் மூலம் அனுப்பிய புதிய ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதன் கிரகத்தில் அதிக அளவு வெப்பமும் அதிக அள்வு குளிரும் மாறி வருவதால் இந்த கிரகம் மிக வேகமாக சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதன் கிரத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் விண்கலம் மரைனர் 10, 1974 மற்றும் 1975ம் ஆண்டின் மூன்று பயணங்களின் போது மேற்பரப்பின் 45%க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் தரவுகளை சேகரித்து அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் நாசா கடந்த 2004ம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் 2008ம் ஆண்டு வாக்கில் புதன் கிரகத்தை அடைந்தது, மற்றும் 2011ல் புதன் சுற்றுப்பாதையில் சேர்க்கப்பட்டது,  அப்போதிலிருந்து அக்கிரகத்தை ஆராயந்து கொண்டு வருகிறது. இது அறிவியல் தகவல்களை தொடர்ந்து சேகரித்துக் கொண்டு வருகிறது, இந்த மாதம் பிற்பகுதியில் 2,900வது புதன் சுற்றுப்பாதையை நிறைவடைகிறது.

- அனைத்தையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே! -
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template