இந்தப் பலோபியன் குழாயின் வெளிப்புறக் கடைசியில் தான் விந்தணுவும் முட்டையும் சங்கமிக்கும். இது உடலுறவு கொண்ட பத்தில் இருந்து பன்னிரண்டு மணி நேரத்திற்குப் பின் ஏற்படும். விந்துடன் சங்கமித்து சினயடைந்த முட்டை பலோபியன் குழாயில் பயணித்து கருப்பையை வந்தடைந்து கருவாக வளரும்.
பின்னர் கருப்பையின் தசைச் சுவர்கள் மொத்தமாகிப் பெருக்கும். பெரிதாக வளரும் கர்ப்பப்பைக்கும், வளரும் கருவுக்கும்,நஞ்சுக் கொடிக்கும் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
வளரும் கருவைச் சுற்றி மெல்லிய ஜவ்வுகள் உருவாகி அது ஒரு கூடு மாதிரி ஆகிவிடும். அந்தக் கூட்டினை 'ஆம்னியாடிக் கூடு' என்று சொல்லுவோம். அதில் தெளிந்த திரவம் கருவினைச் சுற்றிச் சேர ஆரம்பிக்கும்.இந்தத் திரவத்தைத்தான் ' ஆம்னியாடிக் திரவம்' என்போம். இந்த ஆம்னியாடிக் திரவத்தின் அளவு, கரு வளர வளர அதிகரித்து பின்னர்குறையும்.
பன்னிரண்டாம் வாரத்துக் கர்ப்பத்தில் இத்திரவம் சராசரியாக 50 மி.லி. இருக்கும். இருபதாவது வாரத்தில் 400 மி.லி.யும், முப்பத்தைந்தாவது வாரத்தில் இது அதிக அளவான ஒரு லிட்டர் அளவையும் அடையும். பின்னர் கடைசி சில வாரங்களில் இதன் கொள்ளளவு குறைந்து 43&வது வாரத்தில் இதன் அளவு 100&லிருந்து 600 மி.லி. வரை இருக்கக்கூடும். இருபது வாரத்திற்குக் குறைவான காலகட்டத்தில் இதன் நிறம் மஞ்சளாகவும், 36&வது வாரத்தில் இந்த 'பனிக்குட நீர்' எனப்படும் ஆம்னியாடிக் திரவம் நிறமற்றதாகவும் இருக்கும். இந்த ஆம்னியாடிக் திரவத்தில் பல சுரப்பு நீர்கள்(ஹார்மோன்கள்) இருக்கும். இந்நீர் கருவில் இருக்கும் சிசு நன்கு நகருவதற்கும், சமமான சீதோஷ்ண நிலையை அளிக்கவும், இடிபாடுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவும்.
கர்ப்பப்பை சிசுவின் பிறவிக் குறைபாடுகளான உணவுப் பாதை அடைப்பு அல்லது மத்திய நரம்பு மண்டலக் குறைபாடுகள் போன்றவை இருந்தால் அதிக அளவு ஆம்னியாடிக் திரவம் கருப்பையில் இருக்கும் தாய்க்கு நீரிழிவு நோய் இருந்தாலும் இப்பனிக்குட நீரின் அளவு அதிகமாய் இருக்கும்.
தொப்புள் கொடி:
இக்கொடிதான் தாய்க்கும் சிசுவுக்கும் இடையே இருக்கக்கூடிய ஓர் இணைப்புப் பாலம் எனலாம். கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் இதன் நீளம் 50 செ.மீ அளவு இருக்கக் கூடும். இத்தொப்புள் கொடிதான் சிசுவை நஞ்சுக் கொடியோடு இணைத்திருக்கும். அவ்வாறு இணைப்பேற்படுத்தும் இக்கொடியின் மூலமாகத்தான் தாய்க்கும் சேய்க்கும் இரத்த ஓட்டம் ஏற்படும்.
0 comments:
Post a Comment