போட்டோஷாப்பில் இன்று Storke பற்றி பார்க்கலாம். ஒரு படத்தினை
சுற்றி அழகான கலரில் போடர்கள் இதில் செய்யலாம். அதைப்பற்றி இன்றைய
பாடத்தில் காணலாம்.முதலில் கீழே Sarfras Ahamedஐ எடுத்து உள்ளேன்
இப்போது Sarfras Ahamedஐ சுற்றி மார்க்யு டூலால் செவ்வகம் வரைந்துள்ளேன்.
படத்தினை பாருங்கள்
இப்போது நீங்கள் மவுஸில் ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள Feather உங்களுக்கு தேவையான Radius வைத்துக்கொள்ளுங்கள்.
ஓ.கே. கொடுங்கள் (நான் 30 கொடுத்துள்ளேன்)
வழக்கப்படி Ctrl+C - Ctrl+N-Enter -Ctrl+V செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
Sarfras Ahamedஐ சுற்றி மார்க்யு டூலால் ஓரத்தில் செவ்வகம்
வரையுங்கள். அடுத்து Edit -கிளிக் செய்து அதில் உள்ள Stroke
கிளிக் செய்யுங்கள். கீழே படத்தை நன்கு அவதானிக்கவும்.
இதில் Width உங்களுக்கு எந்த பிக்ஸல் அளவிற்கு வேண்டுமோ
அதை தட்டச்சு செய்யுங்கள்.அதன் கீழே உள்ள கலர் பாக்ஸில்
நீங்கள் கிளிக் செய்ய உங்களுக்கு கலர் பிக்கர் -Color Picker -வரும்.
உங்களுக்கு தேவையான நிறத்தினை தேர்ந்தெடுங்கள். நான் சிகப்பு
கலரினை தேர்வு செய்துள்ளேன்.
அடுத்துள்ளது நீங்கள் தேர்வு செய்த கட்டத்திற்கு உள்புறம் - நடுவில்-
வெளிப்புறம் - இதில் எங்கு கலர் கோடு வரவேண்டுமோ -inside-
center-out side -இதில் எது வேண்டுமோ அதை
தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள படத்தினை பாருஙகள்
இப்போது சிகப்பு கலரின் முன் அதைப்போல் மார்க்யு டூலால்செவ்வகம் வரையுங்கள். முன்பு போல் செய்யுங்கள்
நான் பச்சை கலரை கொடுத்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்
தனியே போடர் போடுவது பார்த்தோம். ஆனால் படத்தை சுற்றியே கோடு வருவது பற்றி பார்க்கலாம்.
இப்போது முன்பு சொல்லிகொடுத்தது மாதிரியே செய்யுங்கள். அதாவது கீழே பாருங்கள்
கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
அடுத்த படத்தைப் பாருங்கள். outsideஐத் தெரிவு செய்துள்ளேன்.
அவ்வாறு தெரிவு செய்த சிவப்பு போடர் இடப்பட்ட படம் கீழே
பச்சை, சிவப்பு, நீல போடர்களில்.....
பலமுறை முயன்று பாருங்கள். வெற்றி பெறுவீர்
நன்றி
-மீண்டும் Photoshop பாடம் 12ல் சந்திப்போம்-


















0 comments:
Post a Comment