Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » Video Magic மூலம் வீடியோ எடிடிங் செய்யுங்க

Video Magic மூலம் வீடியோ எடிடிங் செய்யுங்க

Written By Unknown on Friday, 2 May 2014 | 18:17


உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும் நண்பர்களே! தற்காலத்தில் வீடியோ எடிட்டிங் என்பது சர்வ சாதாரணமாக யார்வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள்களே..!!

இத்தகைய மென்பொருட்கள் User Friendlyயாக இருப்பதால் அனைவரும் பயன்படுத்தலாம். Video Edting செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளன. 
எனினும் Video Magic Pro என்ற இம்மென்பொருள் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது.


இந்த மென்பொருளின் மூலம் வீடியோவினை எடிட் செய்ய(Video edit), சேர்க்க(joint video), பிரிக்க(cut video), யூடியூபிலிருந்து பதிவிறக்கம் செய்ய(youtube downloading), ரிங்டோனை உருவாக்க(ringtone creating) என பலவிதமான செயல்களை மேற்கொள்ளலாம்.

  • முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு தேவையான வீடியோவை தெரிவு செய்யவும்.
  • பிறகு Settings window திறக்கும்.
  • அதில் உள்ள Profile என்பதை கிளிக் செய்ய நமக்கு தேவையான வீடியோ கோடக்(videocodec), ஆடியோ கோடக்(video codec) மற்றும் ஃப்ரேம் ரேட்(Frame) என விதவிதமான OPTIONS கிடைக்கும்.

  • தேவையானதை கிளிக் செய்து கொண்டு ஓகே கிளிக் செய்ததும் Preview பார்க்கும் வசதியும் உள்ளதால், செய்யும் மாற்றங்களை முன்கூட்டியே காணலாம்.

இறுதியாக இதன் கீழே உள்ள Start பட்டனை கிளிக் செய்து உங்களுடைய வீடியோ எடிட்டிங்கைத் தொடங்கலாம்.

தரவிறக்கச் சுட்டிஇங்கே கிளிக்!

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நன்றி நண்பர்களே..!!

- உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்! -
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template