Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » தேவையில்லாத தளங்களை web block செய்ங்க!

தேவையில்லாத தளங்களை web block செய்ங்க!

Written By Unknown on Wednesday, 2 April 2014 | 10:47


இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளன. சில தளங்கள் பாதுகாப்பின்றி இருக்கலாம், அலுவலங்களில் சில தளங்களை Block செய்ய வேண்டி வரலாம். அவ்வாறு தேவைப்படும் போது எளிதாக The Web Blocker என்ற மென்பொருள் கொண்டு எப்படி குறிப்பிட்ட தளங்களை Block செய்வது என்று பார்ப்போம். 
முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்யும் போது ClaroBrowser Tool Bar, PC Utilities Pro, Babylon போன்றவை இன்ஸ்டால் செய்யலாமா என்று கேட்கப்படும், அப்போதெல்லாம் Decline என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். 
இன்ஸ்டால் செய்து முடித்த Desktop – இல் உள்ள The Web Blocker மென்பொருளை ஓபன் செய்யுங்கள். இப்போது நீங்கள் இதில் இயங்க உங்களுக்கு Password கொடுக்க வேண்டும். 
அடுத்து சில நொடிகளுக்கு பிறகு அந்த மென்பொருள் ஓபன் ஆகும். நீங்கள் முன்பு கொடுத்த Password கொடுத்து உள்ளே நுழையுங்கள். இப்போது மென்பொருள் கீழே உள்ளது போல இருக்கும். 
இப்போது “Add Address to Block List” என்பதற்கு கீழ் உள்ள பகுதியில் குறிப்பிட்ட தளத்தின் முகவரியை கொடுக்கவும். பின்னர் இடது பக்கம் User List என்பதில் எந்த User – க்கு இது பொருந்தும் என்பதையும் நீங்கள் தெரிவு செய்து “Block Address” என்பதை கிளிக் செய்யுங்கள். பெரும்பாலும் All Users என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது Block List என்பதில் நீங்கள் கொடுத்த தளம் சேர்க்கப்பட்டு விடும். 
இப்போது குறிப்பிட்ட தளத்தை ஓபன் செய்தால் கீழ் உள்ளவாறு வரும். 
இதே போல எத்தனை தளங்களை வேண்டுமானாலும் Block செய்து கொள்ளலாம். Block செய்த பின் மென்பொருளின் Desktop Shortcut – ஐ நீங்கள் நீக்கி விடுவது நல்லது.

- நல்ல பிரஜையாக வாழ வாழ்த்துகிறோம் -
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template