Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » VLC மீடியா பிளேயர் தருவது என்ன?

VLC மீடியா பிளேயர் தருவது என்ன?

Written By Unknown on Friday, 18 April 2014 | 11:35



VLC MEDIA PLAYER பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. இந்த மென்பொருள் மூலம் நாம் அனைத்து வகையான வீடியோ கோப்புகளையும் கண்டு களிக்கலாம். இந்த மென்பொருளில் அனைத்து வீடியோ கோடெக்களும் இருக்கிறது. மேலும் இது ஒரு இலவச மென்பொருள் என்பதால் இதை அனைவரும் விரும்புகின்றனர்.இந்த நிறுவனம் இப்பொழுது தான் இதன் புதிய பதிப்பை(2.0.4) வெளியிட்டு உள்ளது. இதை பற்றியும் இதன் பெருமைகள் பற்றியும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதனால் இந்த பிளேயரில் உள்ள பயனுள்ள சில அம்சங்களை பற்றி பார்ப்போம்.


இதை பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இந்த பதிவு இதனை பற்றி அறியாதவர்களுக்கு.




1.RIP DVD's :

இந்த பிளேயரில் அடிப்படையாக ஒரு DVD ரிப்பர் உள்ளது. இதை விட சிறந்த DVD ரிப்பர்கள் நிறைய இருக்கிறது. ஆனால் இந்த மென்பொருள் மூலம் நாம் தரமான DVD வீடியோவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .



படங்களை ரிப் செய்ய :

  MEDIA -> CONVERT/SAVE->DISC இங்கே செல்லவும் .இங்கே நீங்கள் ஆரம்ப நிலையை சரி செய்யலாம் மற்றும் குறிப்பிட்ட தலைப்புக்கள் அல்லது அத்தியாயங்களையும் மட்டும் RIP செய்ய முடியும். இதில் நீங்கள் கோப்பின் பெயரையும் , கோப்பை சேமிக்க வேண்டிய இடத்தையும், கோப்பின் பார்மாட்டையும் தேர்வு செய்யுங்கள் அதற்க்கு பின்SAVE பொத்தானை அழுத்தவும். 



2.வீடியோவை பதிவு செய்ய (RECORD VIDEOS) :

 நீங்கள் VLC பிளேயரில் வீடியோவை பார்க்கும்போதே அதை பதிவு செய்யலாம் .முன்னிருப்பாக பதிவு பொத்தான் மறைத்து வைக்கப் பட்டிருக்கும். VIEW->ADVANCED CONTROL - ஐ தேர்வு செய்யவும் உடனே பதிவு பொத்தானை பார்க்கலாம். வீடியோவை பதிவு செய்யவும் பதிவு செய்வதை நிறுத்தவும் அந்த பொத்தானை அழுத்தவும் .



அது மட்டுமல்ல WEBCAM மூலம் நீங்களும் வீடியோவை பதிவு செய்யலாம் . இதற்க்குMEDIA->OPEN CAPTURE DEVICE-ஐ தேர்வு செய்ய வேண்டும்.பின்னர் பதிவு பொத்தானை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.



3.RAR கோப்புகளை முன்னோட்டம் பார்க்க :
                                     



VLC மீடியா பிளேயரில் நீங்கள் ZIP செய்துள்ள வீடியோ கோப்புகளை பார்வையிடலாம்.ஒரு படத்தை பதிவிறக்கும் போது அதை பிரித்து வைத்திருப்போம் அதில் முதல் பாதி உள்ள கோப்பை(*.part1.rar) நீங்கள் இதில் பார்வையிடலாம்.அதற்க்கு பின் மீதி உள்ள பாகங்களை அதுவே சேர்த்து நமக்கு அதை முன்னோட்டமிடும் .




4.வீடியோ மற்றும் ஆடியோ கோப்பின் பார்மேட்டை மாற்ற (VIDEO CONVERSTION) :

 வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மாற்ற MEDIA-> CONVERT / SAVE - ஐ தேர்வு செய்யுங்கள் பின்னர் ADD பொத்தானை அழுத்தி கோப்பினை தேர்வு செய்யுங்கள் பின்னர் CONVERT/SAVE பொத்தானை அழுத்துங்கள் அதில் கோப்பின் விவரங்களை கொடுத்து பின்னர் CONVERT பொத்தானை அழுத்துங்கள். VLC - ஐ பயன்படுத்தி நாம் வீடியோ கோப்பினை MP4, WMV, AVI, OGG, MP3 போன்ற பல்வேறு வடிவங்களாக மாற்றலாம் .


5. வீடியோவை தரவிறக்க (DOWNLOAD VIDEOS) :



நீங்கள் VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவை YOUTUBE போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கலாம் மற்றும் பார்க்கலாம் . பிளாஷ் பிளேயர் இல்லாத கணினிகளில் இது நமக்கு கைகொடுக்கும் . பதிவிறக்க MEDIA->OPEN NETWORK STREAM -ஐ தேர்வு செய்யுங்கள் அதில் வீடியோவின் URL- ஐ உள்ளிடு செய்து PLAY பொத்தானை அழுத்துங்கள்.

இதை பதிவிறக்க : VLC Media Player 

இந்த அளவு வசதிகள் நிறைந்து இருபதனால் தான் இதனை நானும் பயன்படுத்துகிறேன் நீங்களும் டவுன்லோட் செய்து பயன்படுத்துங்களேன்


- அறிவை அறிவால் அறியும் அறிவே அறிவு!! -
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template