Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » NetBookஇன் வேகம் குறைவாக இருக்கா? வாங்க வைத்தியம் பாப்பம்....

NetBookஇன் வேகம் குறைவாக இருக்கா? வாங்க வைத்தியம் பாப்பம்....

Written By Unknown on Saturday, 19 April 2014 | 10:59

தற்பொழுது NetBook பலராலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இதன் அழகிய தோற்றம், விலையும் குறைவு, எளிதாக எடுத்துச் சென்று கையாளுவதற்கு வசதியாக இருப்பதால்அனைவராலும் விரும்பப்படுகிறது. சமீப காலமாக அனைவரையும் கவரும் வகையில், பலப்பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் இந்த NetBook கள் உருவாக்கப்பட்டு சந்தையில் விற்கப் படுகின்றன. 

ஆனால் இது என்னதான் அழகாகவும், கைக்கு அடக்கமாகவும் இருந்தாலும், இவற்றை மற்ற கணினிகளோடு அல்லது மடிக்கணினிகளோடு ஒப்பிட இயலாது. ஏனெனில் இவற்றில் DVD ட்ரைவ்கள் இருப்பதில்லை என்பது ஒருபுறமிருந்தாலும், பெரும்பாலான NetBook களில் நினைவகம் (RAM) 1 GB அளவு மட்டுமே உள்ளதால் ஒரு சில பயன்பாடுகளை இயக்குவது சற்று சிரமமாக இருக்கும். 


இது போன்ற சமயங்களில் நம்மிடம் உள்ள பென் ட்ரைவ், SD மெமரி கார்டு இவற்றைக் கொண்டு, நமது நெட் புக்கின் வேகத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். இதற்கான வசதியை விண்டோஸ் 7 இயங்குதளத்தில் உள்ள Ready Boost எனும் கருவி வழங்குகிறது. 


முதலில் உங்களிடமுள்ள SD கார்டு அல்லது பென் ட்ரைவில் குறைந்த பட்சமாக 256 MB காலியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் மெமரி கார்டை NetBook -இல் உள்ள கார்டு ரீடரில் செருகவும் அல்லது பென் ட்ரைவை USB போர்ட்டில் செருகவும். இப்பொழுது விண்டோஸ் 7 இயங்குதளத்தில் AutoPlay திரையில் Speed up My System லிங்கை க்ளிக் செய்யுங்கள். 



                                   





இப்பொழுது திறக்கும் Removable Disk Properties திரையில் உள்ள Ready Boost டேபில் Use this device ஐ தேர்வு செய்து, அந்த குறிப்பிட்ட மெமரி கார்டு அல்லது பென் ட்ரைவில் எவ்வளவு இடத்தை இதற்கு பயன்படுத்தலாம் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 





                                





OK பட்டனை க்ளிக் செய்த பிறகு, Ready Boost உங்கள் SD card அல்லது Pen Drive ஐ உங்கள் NetBook வேகமாக இயங்கும் படியாக தயார் செய்யும். 


                                  

அடுத்த முறை இவை இணைக்கப் படும் பொழுது, தானாகவே இவற்றை Ready Boost இற்கு பயன் படுத்திக் கொள்ளும். Windows Explorer -இல் இவற்றை திறந்து பார்க்கும் பொழுது Ready Boost எனும் கோப்பு உருவாகியிருப்பதை கவனிக்கலாம்.




                                   





ஆனால் இந்த SD Card அல்லது Pen Drive ஐ Eject செய்யும் பொழுது, இந்த கோப்பு தானாகவே நீக்கப்பட்டு விடும். ஒருவேளை eject செய்யாமல் எடுத்து விட்டால் நீங்களாக இந்த கோப்பை நீக்கி விடலாம். இவற்றை eject செய்யும் பொழுது கீழே காட்டப்பட்டுள்ளது போல பிழைச் செய்தி வரும். 





                                





Continue பொத்தானை அழுத்தி eject செய்து கொள்ளலாம். இது போல உங்கள் தேவைக்கு ஏற்றபடி SD Card மற்றும் Pen Drive இரண்டையும் கூட இந்த Ready Boost வசதிக்கு பயன்படுத்தி உங்கள் NetBook இன் வேகத்தை இன்னும் அதிகரிக்கலாம்.


Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template