Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » காய்கறிகளும், கருச்சிதைவும்

காய்கறிகளும், கருச்சிதைவும்

Written By Unknown on Tuesday, 1 April 2014 | 02:21


 கருச்சிதைவை உண்டாக்கவல்ல காய்கறிகள் பற்றிய குறிப்பு
கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக அனைவருக்கும் ஒருசில பழங்களை சாப்பிட்டால் தான் கருச்சிதைவு ஏற்படும் என்று தெரியும். ஆனால் பழங்கள் மட்டுமின்றி, ஒருசில காய்கறிகளின் மூலமும் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் இந்த காலத்தில் தான் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.



எனவே இக்காலத்தில் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடனே வேலையை காண்பித்துவிடும். அதற்காக அதனை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. ஆனால் மிகவும் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

இதற்கு காரணம் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள் தான். ஏனென்றால் வைட்டமின்கள் அதிகமாக இருந்தால், இரத்தக்கசிவு ஏற்படுவதோடு, கடுமையான வலியையும் உண்டாக்கும். எனவே கீழ்கூறிய சில காய்கறிகளை பிரசவத்திற்கு முன் தவிர்ப்பது நல்லது.

* கத்திரிக்காயில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், இதனை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

* கர்ப்பிணிகளுக்கு ஒரு ஆபத்தான ஒரு கீரை என்றால் அது வெந்தயக்கீரை தான். ஏனெனில் வெந்தயக் கீரையை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த கீரையை கர்ப்பிணிகள் இறுதி மூன்று மாதங்களில் தொடவேக் கூடாது.

* பசலைக் கீரையை அதிகம் உட்கொண்டாலும், கருச்சிதைவு ஏற்படும். அதிலும் இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் கருச்சிதைவு ஏற்படும். எனவே இந்த கீரையை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும்.

* கசப்பு தன்மையுடைய ப்ராக்கோலியை தினமும் கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

* கர்ப்பமாக இருக்கும் போது காலிஃப்ளவர் சாப்பிட்டால் நல்லது என்று சொன்னாலும், இதனை கோபி மஞ்சூரியன் போன்று செய்து சாப்பிட்டால், பின் கர்ப்பமானது பிரச்சனையாகிவிடும். ஏனெனில் இதிலும் வைட்டமின் சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.

* குடமிளகாயின் சுவை அனைவரையும் ஈர்க்கும். ஆனால் இதனை சாப்பிட்டால், கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும். ஆகவே பிரசவம் முடியும் வரை இதனை சாப்பிடுவதை சற்று தவிர்க்கலாமே!
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template