Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்

ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்

Written By Unknown on Monday, 28 April 2014 | 11:32

திருமணம் என்று சொன்னாலே மணமக்களின் முகத்தில் ஒருவித மாற்றம்  தெரியும். குறிப்பாக மணமகளில் நன்கு தெரியும்.  திருமணத்தன்று இன்னும் அழகாக காணப்பட அவர்கள் அழகு நிலையங்களுக்கு சென்று, பலவித பராமரிப்புகளை மேற்கொள்வார்கள். 
இத்தகைய அழகு மெருகூட்டல் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கு தேவையான ஒன்றே. ஆகவே திருமணத்தன்று மணமகன் அழகாக காணப்படுவதற்கு, ஒருசில பராமரிப்புகள் என்று சொல்வதை விட, செயல்களை தினமும் செய்து வந்தால், நிச்சயம் அழகாக ஜொலிக்க முடியும்.
பொதுவாக பெண்கள் அழகானவர்கள் என்று சொல்லப்படுவதற்கு காரணம் அவர்கள் அழகிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். எனவே தான், அவர்கள் திருமணத்தன்று மிகவும் அழகாக காணப்படுகின்றனர். 
ஆனால் ஆண்கள் திருமணத்தின் போதும் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால், தமது இயற்கையான அழகையும் சிதைத்து விடுகின்றார்கள்.
ஆண்கள் பெண்களை விட அதிக அளவில் முகப்பருக்களால், கரும்புள்ளிகளினாலும்  பாதிக்கப் படுகின்றனர். இத்தகைய பருக்கள், மறுக்கள் திருமணத்தன்றும் இருந்தால் நன்றாக இருக்குமா? மணமகளுக்கே முகத்தைப் பார்க்க அருக்குளிப்பாக இருக்குமல்லவா? 
திருமணத்திற்கு வருவோர் ஜோடியாக பார்க்கும்போது. மணமகள் அழகாகவும் மணமகன் அநாகரிகமாகவும் இருந்தால் பொருத்தமில்லாத ஜோடி என முகம் சுழிப்பார்களல்லவா. 
இவர்கள் எல்லோரையும் மகிழ வைத்து திருமணத்தன்றும், அதன் பின்பும் அழகான மணமகனாக திகழ ஆண்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்
ஃபேஸ் வாஷ் 
முகத்திற்கு சோப்பை பயன்படுத்தி கழுவுவதை விட, ஏதேனும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும். ஏனெனில் சோப்பானது சருமத்தை அதிக வறட்சியடையச் செய்யும். குறிப்பாக இரவில் படுக்கும் முன், தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவினால், முகத்தில் பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.
முக அழகுக்கு: 
பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள். வீட்டுக்கு வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் அலசவும். இன்னும் கொஞ்சம் டைமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும். இதனால் முகம் தெளிவடையும். இதனை தினமும் செய்யுங்கள்.
சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும். இது மாசம் 2 முறை செய்யவும்.
தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவது நன்கு அழுத்தி தேய்து ஊற வைக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். கருபுள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.
தழும்புகள் மறைய
அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.
பாதாம் எண்ணெய்
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.
பிள்ளைக் கற்றாழை
கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.
பால்
தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.
தக்காளி சாறு
தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.
அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.

உதடுக்கு: 
சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும். (தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை)
பற்களுக்கு: 
எலுமிச்சை சாறு + உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
கூந்தலுக்கு; 
தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும்
வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை சிறிது செம்பருத்தி பூ,இதனை காய வைத்து நன்றாக அறைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம். உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்
இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். கூந்தலை ட்ரையாக வைக்க வேண்டாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும். முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்
ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை கூந்தலுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.
எலுமிச்சை ஜூஸ்
பெரும்பாலும், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், முகத்தில் பருக்கள் வருவதோடு, உடைந்து பரவவும் ஆரம்பிக்கும். எனவே ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, அதில் தேனை சேர்த்து, கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், குடலியக்கப் பிரச்சனை சரியாகிவிடும்.
தண்ணீர் 
தினமும் 4 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். உடலில் டாக்ஸின்கள் அதிகமாக இருந்தாலும், அவை பருக்களை உண்டாக்கும். எனவே தண்ணீரை குடிப்பதால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி விடுவதோடு, உடலும் நன்கு பொலிவோடு காணப்படும்.
ஷேவிங் 
தினமும் ஷேவிங் செய்யாமல் இருந்தால், தாடியின் அளவானது அதிகரிப்பதோடு, முகத்தில் பிம்பிள்களும் வந்துவிடும். எனவே திருமணத்தன்று, முகத்தில் பிம்பிள் வராமல் இருப்பதற்கு, திருமணத்திற்கு ஒருமாதம் முன்பிருந்து, ஷேவிங் செய்ய வேண்டும். இல்லையெனில் ட்ரிம் செய்யலாம்.
நைட் க்ரீம் 
இரவில் படுக்கும் முன், தினமும் சருமத்திற்கு மாய்ச்சுரைசரை தடவி படுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், சருமம் மென்மையாகும். மேலும் சருமத்தில் வறட்சி இருக்காது. அதுமட்டுமின்றி, இதனை தொடர்ந்து செய்யும் போது, இதன் பலனை எப்போதும் பெறலாம்.
சன் ஸ்கிரீன் லோசன்
ஆண்கள் அடிக்கடி வெளியே செல்ல வேண்டி இருப்பதால், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு, சன் ஸ்கிரீன் லோசனை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் மாறுவதை தடுக்கலாம்.
காபி 
காப்ஃபைன் அதிகம் உள்ள பொருளான காபி மற்றும் இதர பானங்களை குடித்தால், முகத்தில் பருக்கள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகள் வரும். எனவே திருமணத்தன்று நன்கு அழகாக காணப்படுவதற்கு, கொஞ்ச நாட்கள் அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பீர் 
ஆல்கஹாலில் ஒன்றான பீர் குடித்தால், சருமம் பொலிவோடு இருக்கும். அதுவும் அளவாக குடித்தால், நன்மைகளை பெறலாம். இல்லையெனில் தொப்பை வந்துவிடுவதோடு, உடலுக்கும் உயிருக்கும் கேடு தான் விளையும்.
வியர்வை 
உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது மிகவும் நல்லது. ஏனெனில் வியர்க்கும் போது, உடலில் இருந்து, டாக்ஸின்கள் வெளியேறிவிடும். எனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக கொண்டால், உடல் அழகாவதோடு, முகமும் நன்கு புத்துணர்ச்சியுடன் 
ஃபேஸ் பேக் 
பெண்கள் மட்டும் தான் ஃபேஸ் பேக் போட வேண்டுமென்பதில்லை. ஆண்களும் வாரத்திற்கு ஒரு முறை, வீட்டில் உள்ள மஞ்சள், வெள்ளரிக்காய், பால், கடலைமாவு போன்றவற்றை பயன்படுத்தி, ஃபேஸ் பேக் போட்டால், முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.

Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template