Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » கர்ப்பமும் உடற்பயிற்சியும்

கர்ப்பமும் உடற்பயிற்சியும்

Written By Unknown on Saturday, 29 March 2014 | 02:16

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய மற்றும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் குறித்து இப்போது தெரிந்துகொள்வோம். கர்ப்பிணிகள் ஓய்வு தேவையென  நினைக்கும்போது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

வீட்டு வேலைகளை ஒரே சமயத்தில் வேகமாக தொடர்ந்து செய்வதைத் தவிர்த்து நன்கு இடைவெளி விட்டுச் செய்ய வேண்டும். மென்மையான  உடற்பயிற்சிகள் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு நலமான உணர்வினைக் கொடுப்பதோடு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் அவர்களை  நலமாக வைத்திருக்கும்.

முறையான உடற்பயிற்சிகள், கர்ப்பிணிகளின் தசைகளை முறுக்கேற்றுவதோடு குழந்தை பிறப்பின்போது உபயோகப்படுத்தப்படும் தசைகளை  வலுவுள்ளதாக்கும். கனமான பொருள்களைத் தூக்கும்போதோ அல்லது மரச்சாமான்களை நகர்த்தும்போதோ, கீழே விழுந்து விபத்து ஏற்பட  வாய்பிருப்பதால் அத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்த்தலை நினைவில் கொள்ளவேண்டும்.

வேகமாய் உடனுக்குடன் உட்கார்ந்து எழுகின்ற மற்றும் இரு கால்களை உயர்த்தக்கூடிய உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை  வயிற்றுப்பகுதி மற்றும் பின்புறத் தசைகளுக்கு அதிக உளைச்சலைக் கொடுக்கும். உடற்பயிற்சிகளைக் கடினமாக, உடல் சோர்வடையும் வரை  செய்வதைத் தவிர்த்தல் வேண்டும்.

தினமும் செய்யக்கூடிய செயல்களே உடற்பயிற்சிக்குச் சரியான மாற்று என எண்ணி உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்கக்கூடாது. நடப்பதை ஓர்  உடற்பயிற்சியாகப் பரிந்துரைக்கலாம். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் செய்யும் சிறப்புப் பயிற்சிகளைப் போவே அவர்களின் நடை, உடை,  பாவனைகளும் முக்கியமானதாகும். 

அவர்களின் உடல் பளுவாக இருப்பதால் எடையின் பகிர்மானம் மாறுபடும். மேலும் இடுப்பு மூட்டுகளில் அதிக அசைவுகள் இருக்கும். அதனால், கர்ப்ப  காலத்தில் தாய்மார்கள் எப்படி நிற்க வேண்டும், உட்கார வேண்டும், மேலும் சிரப்படாமல் பொருட்களை எப்படி எடுக்க வேண்டுமென அறிந்திருக்க  வேண்டும்.


Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template